பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

0
140

20 ஓவர் உலகக் கிண்ண போட்டியில் இன்றைய ஆட்டத்தில் கோஹ்லியின் அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான் அணி.

பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளித்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட ரோகித் சர்மா 10 ஓட்டங்களில் அமிர் பந்தில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சொதப்பி வரும் தவான் இந்த போட்டியிலும் ஏமாற்றம் அளித்தார்.

6 ஓட்டங்கள் எடுத்திருந்த தவான் சமி பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த பந்திலேயே ரெய்னா நடையைகட்ட இந்திய அணி நெருக்கடிக்கு தள்ளப்பட்டது.

தொடர்ந்து களமிறங்கிய தோனி மற்றும் விராட் கோஹ்லி பொறுப்பாகவும் அதேசமயம் அதிரடியாகவும் ஆடி 15.5 ஓவர்களில் 119 ஓட்டங்களெடுத்து பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளனர்.

முன்னதாக துடுப்பாட்டத்திற்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது அனைவரையும் ஆச்சிரியப்படுத்தியது.

தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கிய அகமது ஷெசாத் மற்றும் ஷார்ஜில் கான் ஆகிய இருவரும் ஓட்டங்கள் குவிக்க சிரமப்பட்டனர்.

பாகிஸ்தான் அணி 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 17 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷார்ஜில்கான் ரெய்னா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அகமது ஷெசாத் 25 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய அப்ரிடி, அதிரடியாக ஆட முயன்று 14 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய மாலிக்கும், அக்மலும் அதிரடியாக ஆட, பாகிஸ்தானின் ரன் வேகமாக உயர்ந்த்து. சிறப்பாக ஆடிய அக்மல் 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மாலிக்கை 26 ரன்களில் வெளியேற்றினார் நெக்ரா.

18 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 118 ரன்கள் எடுத்தது. இந்திய அணித் தரப்பில் நெக்ரா, பும்ரா, பாண்டியா, ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்கள்.

LEAVE A REPLY