பாகிஸ்தான் அணிக்கு 97 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

0
262

10 அணிகள் பங்கேற்றுள்ள 5-வது பெண்கள் 20 ஓவர் உலகக் கிண்ண  கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் டெல்லியில் இன்று நடந்துவரும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சனா மிர் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இந்தியாவின் தொடக்க வீராங்கனைகளாக மிதாலி ராஜும், வனிதாவும் களமிறங்கினார்கள். வனிதா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான மிதாலி 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்திய அணியில் அதிகப்பட்சமாக வேதா 24 ரன்கள் எடுத்தார். குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்களை இழந்ததால் இந்திய பெண்கள் அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்களை இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பெண்கள் அணி களமிறங்கியுள்ளது.

LEAVE A REPLY