பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா பந்து வீச முடிவு: ஆட்டம் 18 ஓவர்களாக குறைப்பு

0
161

20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணி, அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியை இன்று எதிர்கொள்கிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த ஆட்டம் தொடங்கியது.

இந்திய அணிக்கு இன்றைய ஆட்டம் வாழ்வா? சாவா? போராட்டமாகும். கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் இருக்கிறது. இதனால் கொல்கத்தா மைதானத்தில் இந்திய அணி சாதிக்குமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இரு அணிகளும் இந்த மைதானத்தில் 20 ஓவர் போட்டியில் முதல் முறையாக மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்தை வென்று இருந்தது. கொல்கத்தா மைதானத்தில் தான் இந்த வெற்றியை பெற்றது. இதனால் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி நம்பிக்கையுடன் இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த போட்டியில் விளையாடிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

மழை காரணமாக ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக 8.30 மணிக்கு தொடங்கியது. மேலும் அணிக்கு தலா 2 ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது.

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY