வரலாற்றை மாற்றிக் காட்டுவோம்: சவால் விடும் வக்கார் யூனிஸ்

0
258

இந்தியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இங்கு நடந்த அனைத்து ஆட்டத்திலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது.

அதேசமயம் உலகக்கிண்ண தொடரில் இந்தியாவை வீழ்த்தியது கிடையாது என்ற சோகம் பாகிஸ்தான் அணிக்கு உள்ளது.

இந்நிலையில் வரலாறு என்பது கண்டிப்பாக மாறக்கூடியது, இந்த முறை அதை மாற்ற முடியும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், இந்தியாவுக்கு தற்போது அதிக நெருக்கடி உள்ளது. ஒரு ஆட்டத்தில் தோற்றால் கூட தொடரை விட்டு வெளியேறுவிடும் நிலையில் இந்தியா உள்ளது.

இது எங்களுக்கு சிறப்பான விடயமாக உள்ளது. மேலும், கொல்கத்தாவில் நாங்கள் ஆதிக்கம் செலுத்து வந்துள்ளோம், எங்களுக்கு சாதகமாக பல விடங்கள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY