பாகிஸ்தான் வீரர் அமீருக்கு துடுப்பாட்ட மட்டையை பரிசளித்த கோஹ்லி

0
275

இந்திய கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் விராட் கோஹ்லி, பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது அமீருக்கு தனது துடுப்பாட்ட மட்டையை பரிசளித்துள்ளார்.

டி20 உலகக்கிண்ண தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் கொல்கத்தா, ஈடன் கார்டனில் இன்று நடக்கிறது.

இதற்காக இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர் அமீரை அழைத்த விராட் கோஹ்லி அவருக்கு தன்னுடைய துடுப்பாட்ட மட்டையில் ஒன்றை பரிசளித்தார்.

முன்னதாக ஆசியக்கிண்ண தொடரின் போது சிறப்பாக செயல்பட்ட அமீருக்கு வாழ்த்து தெரிவித்த கோஹ்லி, அவருக்கு தனது துடுப்பாட்ட மட்டையை வழங்குவதாக கூறியிருந்தார். அதன் படியே கோஹ்லி தனது துடுப்பாட்ட மட்டையை அவருக்கு வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY