இலங்கை அணியில் மலிங்காவுக்குப் பதில் ஜெப்ரி வாண்டர்சே நியமனம்

0
135

கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான மலிங்கா இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து குணமடைந்து வருகிறார்.

வங்காளதேசத்தில் சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண  20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணியின் கேப்டனாக இருந்த மலிங்கா ஒரு ஆட்டத்தில் மட்டுமே களம் இறங்கினார். காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.

இருப்பினும் 20 ஓவர் உலகக் கிண்ண  போட்டிக்கான இலங்கை அணியில் அவர் நீடித்தார். ஆனால், காயம் குணமடையாததால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. முழு உடல்தகுதியை எட்ட முடியாது என்பதை உணர்ந்த மலிங்கா 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இருந்து நேற்று விலகினார். அவர் உடனடியாக நாடு திரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.

இந்நிலையில், உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மலிங்காவுக்கு பதிலாக ஜெப்ரி வாண்டர்சே நியமிக்கப்பட்டுள்ளார். 26 வயதான லெக் ஸ்பின்னரான வாண்டர்சே, இலங்கை அணிக்காக இதுவரை நான்கு டி20 போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் ரங்கானா ஹெராத், சச்சிதா செனநாயகே ஆகியோருடன் வாண்டர்சே விரைவில் அணியில் இணைய உள்ளார்.

LEAVE A REPLY