காத்தான்குடியில் மின்கம்பத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிள் விபத்து: மௌலவி வபாத்

0
99

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவு நகரில் சனிக்கிழமை நண்பகல் ஏற்பட்ட வீதி விபத்தில் ஏறாவூரைச் சேர்ந்த மௌலவி ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சசையளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமாகியுள்ளார்.

இவர் அதிவேகமாக வீதியில் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நடு வீதியில் உள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் சிக்கிய ஏறாவூர் ஜாமியுல் அக்பர் மத்ராஸாவின் மௌலவி அபுல் ஹஸன் முஹம்மத் ஒஸாமா (வயது 24) என்பவரே படுகாயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மரணமானார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த மற்றைய நபர் விபத்து நடந்த சமயம் தப்பியோடிவிட்டதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY