தமிழ் தேசிய கூட்டமைப்பின் பா.உ. யோகேஸ்வரன் இனத்துவேச வார்த்தைகைளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்: சிப்லி பாரூக்

0
195

வாகரை, இறாலோடை வள்ளுவர் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் வெளிப்படுத்திய கருத்தான இந்த பிரதேச மக்களைப் பொறுத்தவரை கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காது முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்களித்துள்ளதை நான் வாக்கு எண்ணும் நிலையத்தில் நேரடியாகக் கண்டேன். இந்த சம்பவமானது தமிழ் மக்களை மிகவும் பாதித்திருந்தது. எமது இளைஞர்களின் போராட்டத்தை நேரடியாக பார்த்த இந்த பிரதேச மக்கள் அவர்களின் தியாகங்களை மறந்து அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் மாற்றுக் கட்சிக்கு வாக்களித்துள்ளீர்கள்.

தமிழர்களுடன் இணைந்து இஸ்லாமிய மாணவர்கள் கல்வி கற்கக்கூடாது என இஸ்லாமியர்களுக்கு தனியானதொரு கல்வி வலயத்தை உருவாக்கி இனவாதத்தை தூண்டிய பிரதியமைச்சர் அமீர் அலிக்கு இந்த பிரதேச மக்கள் வாக்களித்துள்ளீர்கள்.

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் ஏன் இணைந்து படிக்க முடியாது? அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சமுர்த்திக் கொடுப்பனவை நேரில் சென்று வழங்கினார் என்பதற்காக தமிழ் இனத்தின் ஒரேயொரு உரிமையாக இருக்கின்ற வாக்குகளை இஸ்லாமிய மகனுக்கு வழங்கி எமது இனத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள். உங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிடிக்கவில்லை என்றால் ஏனைய கட்சிகளில் போட்டியிட்ட தமிழனுக்கு வாக்களித்திருக்கலாம். தமிழ் மக்கள் தமது சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக நாங்கள் இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களானது கடந்த கால மனக்கசப்புக்கள், இனமுறுகளையெல்லாம் புறம் தள்ளிவிட்டு நல்லாட்சியை நோக்கி நாடு பயணிக்க வேண்டும் என்பதற்காக சிறுபான்மை சமூகங்களான முஸ்லிம் சமூகமும், தமிழ் சமூகமும் கடந்த அராஜக அரசாங்கத்திற்கு எதிராக நல்லாட்சி எனும் அரசாங்கத்தினை ஒற்றுமைப்பட்டு உறுவாக்கி அதில் மீண்டும் தேங்காய் பூவும் பிட்டும் போல் வாழத்தொடங்கியுள்ளார்கள்.

இதனை குளப்பியடிகும் நோக்கிலேயே சமூகங்களுக்கு மத்தியில் இனத்துவேச உணர்வினை விதைப்பதுடன் மீண்டும் இரண்டு சமூகங்களுக்கும் இடையில் பாரிய பிளவினை ஏற்படுத்தச் செய்து அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் வங்குரோத்து அரசியல் செய்ய முற்படும் நாடகமாகவே இருக்கின்றது என பதிலடி கொடுத்துள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இரண்டு சமூகங்களையும் பிளவு படுத்துகின்ற இவ்வாறான இனத்துவேச கருத்துக்களை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தனது பதிலடியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கருத்தினை தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியைலாளர் ஷிப்லி பாரூக்,

இவ்வாறு யோகேஸ்வரன் இனங்களுக்கிடையிலே பிளவுகளை ஏற்படுத்த கூடிய மிக மோசமான நச்சுக்கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாடசாலை மட்டத்தில் பேசிவருவதானது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயமாகும். ஏன் என்றால் பாடசாலை மட்டத்திலிருந்தே பிள்ளைகள் மற்ற சமூகத்தின் பிள்ளைகளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்ற நல்ல எண்ணம் விதைக்கப்பட வேண்டிய இடத்தில் இவ்வாறான நச்சுக்கருத்துக்களை விதைப்பதானது மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாக இருக்கின்றது. மறுபக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கூறி இருக்கின்ற இவ்விடயமானது மிக பாரதூரமாக முஸ்லிம்களையும், தமிழ் மக்களையும் பிரிக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதானது அவருடைய வங்குரோத்து அரசியலினை காட்டும் அதே நேரத்தில், அவர் தொடர்ந் தேர்ச்சியாக பாராளுமன்ற பதவியினை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு சமூகங்களையும் மூட்டி விட்டு அதிலே நச்சு கருத்துக்கள் அடங்கிய துவேச வார்த்தைகளை வெளியிட்டு வாக்குகளை கொள்ளை அடிக்கின்ற அடிமட்டத்தனமான அரசியல் முன்னெடுப்பினை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான இனத்துவேச கருத்துக்களை வெளியிடுவதானது தமிழ் தேசியக் கூடமைப்பு இனங்களை பிரித்தாடுகின்ற அரசியலினை முன்னெடுத்து வருகின்றது என்றே பார்க்கப்படுகின்றது.

இந்த நிலைமைகளை அவதானிகின்ற பொழுது பாராளுமன்ற தேர்தலில் தொகுதிவாரி தேர்தல் முறைமை இருந்த கால கட்டத்தில் மறைந்த பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான தேவநாயகம் அதிகப்படியான முஸ்லிம் மக்களின் வாக்குகளை கல்குடா தொகுதியில் பெற்றுத்தான் பாராளுமன்ற கதிரையில் உட்கார்ந்தார் என்பது அழிக்க முடியாத வரலாறாக இருக்கின்ற அதே நேரத்தில் எந்தவொரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதியும் அக்காலகட்டத்தில் கல்குடாவிலிருந்து தெரிவு செய்யப்படவில்லை என்பதும் வரலாறாக இருக்கின்றது. ஆனால் அங்கு வாழ்ந்த அனேகமான முஸ்லிம்கள் தமிழ் பிரதிநிதிகளுக்கே வாக்களித்துள்ளார்கள். அதற்கு நன்றி செலுத்தும் முகமாகவே மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் தேவநாயகம் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கென்று மதுரங்குளம் போன்ற பிரதேசங்களில் பாரிய குடியிருப்புக்களை அமைத்து கொடுத்திருப்பதும் வரலாற்று பதிவுகளாகும்.

அவ்வாறு முஸ்லிம், தமிழ் சமூகம் என்று பாராது யாராக இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக் கூடியவர்களுக்கு மக்கள் வாக்களிப்பதானது மக்களினுடைய ஜனநாயக உரிமையாகும். ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தமிழ் மக்கள் முஸ்லிம் ஒருவருக்கு வாக்களித்திருப்பதனை காரணமாக காட்டி கீழ்த்தரமான முறையில் தமிழ் சமூகத்தினை காட்டிக்கொடுக்கின்ற விடயம் என பாவித்த வார்த்தை பிரயோகமானது உண்மையில் மிகவும் மனவேதனை அளிக்க கூடிய விடயமாகவும், முஸ்லிம் மக்கள் மத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சம்பந்தமாக அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளுக்காக போராடிய தமிழ் ஈழ விடுதலை புலிகளின் போராட்டமானது மிகச்சரியாக அன்று விளங்கியதினால் அவ்வியக்கத்தில்; அதிகப்படியான முஸ்லிம் வாலிபர்கள் இணைந்து செயற்பட்டு தங்களது உயிரினையும் மாய்த்துள்ளார்கள் என்பதும் ஒரு முக்கிய வரலாறாகும். அதிலும் கல்குடா பிரதேசத்திலிருந்தே அதிகளவிலான முஸ்லிம் வாலிபர்கள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் துப்பாக்கிகள் முஸ்லிம்களின் பக்கம் திருப்பப்படும் வரை தமிழ் ஈழ போராட்டத்திற்காக விடுதலை புலிகளுடன் இணைந்தே செயற்பட்டுடிருந்தார்கள்.

ஆகவே இவ்வாறாக முஸ்லிம் சமூகத்திற்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையில் அழிக்க முடியாத சரித்திரம் காணப்படுகின்ற நிலையில் பாராளுமன்ற உறுபினர் யோகேஸ்வரன் இன்னுமொரு சமூகத்தினை இன ரீதியாக நிந்தித்து நசுத்தன்மை வாய்ந்த அடிமட்ட அரசியல் செய்யும் போக்கினை எதிர்காலத்தில் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தொடர்ந் தேர்ச்சியாக இவ்வாறு இன ரீதியான துவேச கருத்துக்களை வெளியிடுகின்ற நிலைமையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பானது உடனடியாக நிறுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் மலர்ந்திருக்கின்ற நல்லாட்சியினூடாக மக்கள் எல்லாவற்றையும் மறந்து தங்களுடைய ஒற்றுமையினை மாத்திரம் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்கின்ற விடயத்தில் இரண்டு சமூகமும் ஒன்று பட்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் இவ்வாறான செயற்பாடுகள் இரண்டு சமூகங்களுக்குமிடையில் மீண்டும் பாரிய அளவிலான விரிசல்களை ஏற்படுதக்கூடியது என்ற அச்சம் எழத்தொடங்கியுள்ளது.

அத்தோடு நிறுத்திகொள்லாமல் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயமானது உருவாக்கப்பட்டதற்கான முக்கிய நோக்கம் முஸ்லிம் மாணவர்கள் தமிழ் மாணவர்களுடன் சேர்ந்து கல்வி கற்க கூடாது என்பதற்காகவே. பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு வரலாறு தெரிந்திருக்கவில்லை என்றால் அவர் வரலாற்றினை தெரிந்து கொள்வதற்காக பினோக்கி பார்க்க வேண்டும். அக்காலகட்டம் எவ்வாறு இருந்தது என்பதனை அவர் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். அந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு ஊரிலிருந்து வெளியேறுவது என்பதும், பிரயாணம் செய்வதென்பதும் பாரிய சவாலாக இருந்த காலகட்டமாகும். முஸ்லிம்கள் கல்குடாவிலிருந்து மட்டக்களப்பிற்கு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது மட்டக்களப்பிலிருந்து கல்குடாவிற்கு செல்வதாக இருந்தாலும் சரி இராணுவத்தினருடைய உதவியினை கொண்டே பயணிக்க வேண்டியதாக இருந்தது.

கல்குடாவிலிருந்து விறகு வெட்ட சென்ற எத்தனையோ நபர்களை கொலை செய்து அவர்களுடைய ஜனாஷாக்களை கூட தீக்கரையாகிய படுபயங்கரமான காலகட்டம்தான் அன்று இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் தமிழ் பிரதேசங்களில் வேலை செய்த முஸ்லிம் அதிகாரிகள் கொலை செய்யப்பட்டும் அச்சுருத்தல்களுக்கு உள்ளாகியும் இருந்தார்கள். எல்லாவற்றுக்கு ஒரு படி மேலாக கல்குடாவினை சேர்ந்த உதவி அரசாங்க அதிபர் வை.அஹ்மட், மேலதீக அரசாங்க அதிபர்.ஏ.கே. உதுமான், சட்டத்தரணி மொஹைடீன், அதிபர் மஃமூட் போன்றவர்கள் ஓன்றாக கல்குடாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த வேலையில் விடுதலை புலிகளின் துப்பாக்கி வேட்டுகளினால் நடு வீதியில் வைத்து துடிதுடிக்க கொலை செய்யப்பட்டார்கள்.

அந்த நேரத்தில்தான் அன்றிருந்த அதிகாரிகள் முஸ்லிகளினுடைய பாடசாலைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அன்று முஸ்லிம் பாடசாலைகளை எல்லாம் ஒன்றிணைத்து மட்டக்களப்பு மத்தி எனும் கல்வி வலயத்தினை உறுவாக்கினார்கள். இந்த நல்லாட்ச்சி அரசாங்கத்தில் இரண்டு சமூகமும் ஒற்றுமையாக வாழுகின்ற இன்றைய காலகட்டத்தில் கூட இவ்வாறு இனத்துவேச கருத்துக்களை வெளியிடுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை போன்றவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அன்றைய பயங்கரமான சூழ் நிலையில் விடுதலை புலிகளின் உச்ச அதிகாரத்துடனான ஆதிக்கம் இருந்த காலகட்டத்தில் அதிகாரிகளை மிரட்டி முஸ்லிகளுக்குறிய வளபங்கீடுகள் சரியான முறையில் கொடுக்கப்படாமல் போனதன் காரணத்தினால்தான் சரியான முடிவு எடுக்க வேண்டிய துர்பார்க்கிய நிலைமைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் தள்ளப்பட்டு முஸ்களுக்கான தனியான கல்வி வலயமாக மட்டகளப்பு மத்தி கல்வி வலயம் ஏற்படுத்தப்பட்டது. ஆகவே பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சம்பந்தமாக நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் தமிழர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க விருப்பம் இல்லை என்றால் வேறொரு கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் என்று கூறுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெளத்த சிங்களவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களிக்காது தேர்தலை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறியிருக்க வேண்டும். மாறாக பெளத்த சிங்கள வேட்பாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே வாக்களிக்குமாறு கூறுயிருந்தார். ஆகவே இவருடைய இக்கருத்தானது அவருடைய சிறு பிள்ளைத்தனத்தினையும் அவர் ஒரு இனவாதி என்பதனையுமே எடுதுக்காட்டுகின்றது. இலங்கையில் இப்பொழுது எந்த ஒரு நபரும் மத ரீதியாக இன்னொருவரை நிந்திப்பது என்பது முற்று முழுதாக நிறுத்தி செயற்படும் அளவிற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக தமிழ், முஸ்லிம், சிங்களம், என மூன்று இன மக்களும் சேர்ந்து வாழுகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான இன ரீதியன கருத்துக்களை ஒதுக்கி வைத்து விட்டு மானசீகமாக ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அதனூடாகத்தான் சுபீட்ச்சமான முறையில் சிறுபான்மை சமூகத்திடம் இருக்கின்ற ஒற்றுமையின் ஊடாக பெரும்பான்மையிடம் இருந்து சிறுபான்மைகளின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் யுத்தகாலங்களில் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் எவ்வாறு முரண்பட்டுகொண்ட நிலையில் இருந்தார்களோ அவ்வாறு குறித்த இரண்டு சாமூகங்களும் தொடர்ந்து காணப்படும் இடத்தில்தான் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனை போன்றவர்கள் நச்சுத்தனமான இனத்துவேச வார்த்தைகளை பேசி தமிழ் மக்களை உசுப்பேர்த்தி தமிழ் மக்களினுடைய வாக்குகளை ஏமாற்றி பெற்றுக்கொண்டு தொடர்ந் தேர்ச்சியாக பாராளுமன்ற கதிரையினை சூடாக்கி கொள்ளலாம் என நினைக்கின்றனர்.

ஆகவேதான் இரண்டு சமூகத்தினையும் பிளவு படுத்தக்கூடிய அடிமட்டத்திலான வங்குரோத்து அரசியல் செய்யும் பாரளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனின் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக தனது பதிலடியில் விளக்கமாக தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாறூக்.

எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY