(Photo) அதிகரித்த வேகம்: மரத்தில் மோதி இளைஞன் ஸ்தலத்திலேயே பலி மற்றுமிருவர் படுகாயம்

0
204

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டம், ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை – நெடியமடுவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் நெடியமடுக் கிராமத்தைச் சேர்ந்த பவளசிங்கம் ஜெயக்காந்தன் (வயது 28) என்ற இளைஞர் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்துகொண்டிருந்த இந்த இளைஞன் வீதி வளைவொன்றில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியோரம் இருந்த மரம் ஒன்றில் மோதுண்டு ஸ்தலத்திலே பலியாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு பழுகாமம் – தும்பங்கேணி பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட விபத்தில் களுமுந்தன்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் பலத்த காயங்களுக்குடன் பழுகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தும்பங்கேணிப் பகுதியிலிருந்து பழுகாமம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இவர்கள் வீதிக்குக் குறுக்கே வந்த மாட்டுடன் மோதி, பின்னர் முன்னால் சென்ற முச்சக்கரவண்டியிலும், மோதியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வெல்லாவெளிப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

7b27d37b-7115-40bc-b0fc-f00c4ca78c51 61720aa2-56e3-4fa5-836b-5f8e8c5755f3 b05f0e5e-57e7-4d04-98d9-72078339a65c e17d0781-79d3-404f-8c1a-9fb1330020c8

LEAVE A REPLY