இங்கிலாந்து புதிய சாதனை

0
150

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 230 ரன் இலக்கை எடுத்து உலக கோப்பையில் புதிய சாதனை படைத்தது.

முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 230 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

230 ரன் இலக்கை எடுத்ததன் மூலம் இங்கிலாந்து அணி உலககோப்பையில் புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 206 ரன்னை சேசிங் செய்ததே சாதனையாக இருந்தது. இதை இங்கிலாந்து நேற்று முறியடித்து புதிய சாதனை புரிந்தது. 20 ஓவர் சர்வதேச போட்டியில் இது 2–வது சிறந்த சேசிங் ஆகும்.

கடந்த ஆண்டு ஜோகன்ஸ் பர்க்கில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 232 ரன் இலக்கை எட்டியதே உலக சாதனையாக இருக்கிறது.

LEAVE A REPLY