கத்தார்: மோட்டார் சைக்கிள் பந்தய ஒத்திகையில் விபத்து- துனிசியா வீரர் பலி

0
144

கத்தார் நாட்டின் தலைநகரான தொஹாவின் புறநகர் பகுதியான லோசைல் என்ற இடத்தில் ‘லோசைல் 600 கோப்பை’க்கான மோட்டோஜிபி (MotoGP) போட்டி ஆண்டுதோறும் இரவுநேரத்தில் மின்விளக்கு வெளிச்சத்தில் நடத்தப்படுகிறது.

இன்று மற்றும் நாளை நடக்கவுள்ள இறுதிச்சுற்றுப் பந்தயத்தில் பங்கேற்பதற்காக லோசைல் ரேஸ் மைதானத்தில் 600 சி.சி. செயல்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் பலநாடுகளை சேர்ந்த வீரர்கள் ஒத்திகை பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது, பத்து மற்றும் பதினைந்தாவது சுற்றுக்கு இடையே எதிர்பாராத விதமாக துனிசியா நாட்டைச் சேர்ந்த வீரரான தவுபிக் கட்டவுச்சி(49) என்ற வீரரின் மோட்டார் சைக்கிள் ஓடுபாதையை விட்டு விலகி சாலையின் ஓரம் உருண்டு, புரண்டது. இதில் படுகாயமடைந்த தவுபிக் கட்டவுச்சி, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் தோஹாவில் உள்ள ஹமாத் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் சகவீரர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY