அங்கோலாவில் மஞ்சள் காய்ச்சலுக்கு 158 பேர் பலி: உலக சுகாதார முகமை கவலை

0
185

தென்னாப்பிரிக்க நாடுகளில் ஒன்றான அங்கோலாவில் பரவிவரும் மஞ்சள் காய்ச்சலுக்கு இதுவரை 158 உயிர்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார முகமை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, கடந்த ஒருமாதத்தில் மட்டும் 50 பேர் இந்த நோய்க்கு பலியானதாகவும், இதுதவிர நாட்டின் தலைநகரான லுவான்டாவில் தேங்கிக் கிடக்கும் சாக்கடைநீர் மற்றும் குப்பை கூளங்களால் மலேரியா, காலரா மற்றும் வயிற்றிப்போக்கு உள்ளிட்ட நோய்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார முகமை கவலை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY