ஜெய்லானி பௌத்தர்களுடையது; அத்தாட்சிகளை முஸ்லிம்கள் அசிட் ஊற்றி அழித்தனர்: அக்மீமன தேரர்

0
244

கூர­கல ஜெய்­லா­னியில் பௌத்த கலா­சார அத்­தாட்­சிகள் 1960 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் அசிட் கொண்டு முஸ்­லிம்­களால் அழிக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­கான ஆதா­ரங்கள் எம்­மி­ட­மி­ருக்­கின்­றன.

ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டாவிட்டால் எதிர்­கா­லத்தில் அசம்­பா­வி­தங்கள் உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மாக அமையும் என சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் தெரி­வித்தார்.

ஜெய்­லானி பள்­ளி­வா­ச­லுக்கு உரிமை கோரும் முஸ்­லிம்கள் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் அமைச்­சர்­களைச் சந்­தித்­தாலும் பௌத்த கலா­சார தொல்­பொருள் பிர­தே­ச­மான பௌத்­தர்­க­ளுக்குச் சொந்­த­மான கூர­க­லயின் வர­லாற்­றினை மாற்­றி­ய­மைத்­து­விட முடி­யா­தெ­னவும் அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­ப­தியைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடாத்­து­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்ள நிலையில் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் மேற்­கு­றிப்­பிட்ட கருத்­தினை வெளி­யிட்­டுள்ளார்.

அவர் இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில் எமது நாட்­டி­லுள்ள சட்­டத்தின் படி எவ­ருக்கும் எங்கும் வாழும் உரி­மை­யுள்­ளது. ஆனால் ஒரு இனத்தின் கலா­சா­ரத்­தையும் பூர்­விக வர­லாற்­றையும் தொல்­பொ­ருட்­க­ளையும் அழித்து விட்டு வாழ முடி­யாது. கூர­க­லயில் ஜெய்­லானி பள்­ளி­வாசல் இவ்­வாறே அமைந்­துள்­ளது.

இதற்கு உதா­ர­ண­மாக ஒன்­றினைக் கூறலாம். பற­வைகள் எமது தலைக்கு மேல் பறந்து செல்­லலாம். ஆனால் எமது தலையில் கூடு­கட்டி வாழ முடி­யாது.

கூர­க­லயில் ஆர். பிரே­ம­தா­சாவின் காலத்தில் 1960 ஆம் ஆண்­டு­களில் அர­சி­யல்­வா­தி­யான அபு­சா­லியின் ஒத்­து­ழைப்­புடன் பௌத்த கலா­சா­ரத்தை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்த அத்­தாட்­சிகள் அழிக்­கப்­பட்­டுள்­ளன. இது ஒரு ஆக்­கி­ர­மிப்­பாகும்.

இத­னா­லேயே ஜெய்­லானி பள்­ளி­வாசல் பௌத்த புனித பிர­தே­சத்­தி­லி­ருந்து அகற்­றப்­பட வேண்­டு­மென நாம் கோரு­கிறோம்.

இற்­காக கடந்த காலங்­களில் நாம் பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். இதன் பிர­தி­ப­ல­னாக பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்தம் கொண்­டா­டப்­பட்டுக் கொண்­டி­ருந்த கட்­ட­டங்கள், கடைகள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்றப்பட்டு விட்டன.

தற்போது பள்ளிவாசல் எஞ்சியிருக்கிறது. அது அவ்விடத்திலிருந்து அகற்றப்பட வேண்டும்.

கூரகல விவகாரம் தொடர்பில் சிங்களராவய அமைப்பும் ஜனாதிபதியைச் சந்தித்து தெளிவுபடுத்தத் தீர்மானித்துள்ளது என்றார்.

-Vidivelli-

LEAVE A REPLY