சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடைய மேலும் இருவர் இந்தியாவில் கைது

0
146

இலங்கையில் சிறுநீரக கடத்தலுடன் தொடர்புடையதாக கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள் இந்திய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில், பந்தோலி பிரதேசத்தில் வைத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய நபர் ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டு, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடக செய்திகள் குறிப்பிடுகின்றன.

சிறுநீரகத்தை விற்பனை செய்வதற்காக 05 பேரை இலங்கைக்கு அழைத்து வந்திருப்பதாக குறித்த சந்தேகநபர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY