அவுஸ்திரேலியா–நியூசிலாந்து இன்று மோதல்

0
151

20 ஒவர் உலக கிண்ணத்தில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. தர்மசாலாவில் மாலை 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஆஸ்திரேலியா– நியூசிலாந்து (குரூப் 2) அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் விளையாடுகிறது. வெற்றியுடன் தொடங்க அந்த அணி முயற்சிக்கும். டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், வாட்சன், ஸ்டீவன் சுமித், மிச்சேல் மார்ஷ் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், ஜேம்ஸ் பவுக்னெர், ஹாசல்வுட், ஹாஸ்டிங், ஆந்த்ரே டை போன்ற பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.

நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தியது. அந்த வெற்றி உற்சாகத்துடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. அந்த அணியில் வில்லியம்சன், மார்டின் குப்தில், கோரி ஆண்டர்சன், ரோஸ் டெய்லர், முன்ரோ, ரோஞ்சி, சவுத்தி, மிலின் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இந்தப்போட்டியில் மழை குறுக்கீடு இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடக்கும் ஆட்டத்தில் (குரூப் 1) இங்கிலாந்து– தென் ஆப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்துகின்றன.

முதல் ஆட்டத்தில் விளையாடும் தென்ஆப்பிரிக்கா அணி வலுவாக இருக்கிறது. அம்லா, டி வில்லியர்ஸ், பிளிஸ்சிஸ், டி காக், டுமினி, டேவிட் மில்லர் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ், அபோட், இம்ரான் தாகீர் போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 182 ரன் குவித்தும் தோல்வி அடைந்தது. இதனால் வெற்றி கட்டாயத்தில் இன்று களம் இறங்குகிறது. இதில் தோற்றால் அந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் ஏற்படும்.

LEAVE A REPLY