இன்று முதல் தடையின்றிய மின்சாரம்

0
125

இன்று முதல் மின்சாரம் விநியோகம் தடையின்றி முன்னெடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுபித்தலுக்கான மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

செயலிழந்துக் காணப்பட்ட நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் இடைக்கிடை துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பாவைனையில் இல்லாமல் கைவிடப்பட்டுள்ள நிலையில் உள்ள எம்பிலிப்பிடடிய அனல் மின் நிலையம் மற்றும் புத்தளம் அனல் மின் நிலையம் ஆகியனவற்றை மீண்டும் செயற்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுபித்தலுக்கான மின்சக்தி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY