வங்காளதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து

0
114

பெண்கள் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று பெங்களூரில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து – வங்காளதேசம் அணிகள் மோதின.

டாஸ் வென்ற இங்கிலாந்து பெண்கள் அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இங்கிலாந்து அணியின் கேப்டன் சார்லட் எட்வர்ட்ஸ் 51 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காதேச பெண்கள் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்தியாவிடம் தோல்வியை தழுவியுள்ள வங்காளதேச அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும்.

LEAVE A REPLY