(Photos) அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு

0
331

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்கும் முக­மாக இன்­றைய தினம் பொது எதி­ர­ணி­யி­னரால் ஹைட் பார்க் மைதா­னத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 48 எம்.பி.க்கள் கள­மி­றங்­ கி­யி­ருந்­தனர்.

அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்­டத்­தில் பல்­லா­யிரக் கணக்­கான கட்சி ஆத­ர­வாளர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பங்­காளி கட்­சியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது. இன்று நடை­பெற்ற போராட்­டத்தின் கார­ண­மாக கொழும்பில் பல பகு­தி­க­ளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்­களை இணைக்காதே , எட்காவை உட­ன­டி­யாக நிறுத்து போன்ற கோஷங்­களை எழுப்­பிய வண்­ணமும் மஹிந்த ராஜ­ப­க்ஷவின் புகழ்­பா­டிய வண்­ணமும் ஆத­ர­வா­ளர்­கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.

கூட்டத்தில் முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக்ஷ , முன்னாள் சபா­நா­ய­கரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சமல் ராஜ­பக்ஷ, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் முன்னாள் தலைவர் சோமா­வன்ஸ அம­ர­சிங்க, முன்னாள் பிர­தம நீதி­ய­ரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

20160317092419 (2)மேலும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ஸ, தினேஷ் குண­வர்­தன, பந்­துல குண­வர்­தன , வாசு­தேவ நாண­யக்­கார , சந்­தி­ர­சிறி கஜ­தீர, உதய கம்­மன்­பில, முன்னாள் அமைச்­சர்­க­ளான திஸ்ஸ விதா­ரன, ஆகி­யோரும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாமல் ராஜ­பக்ஷ, கெஹ­லிய ரம்­புக்­வெல, சி.பி ரத்­நா­யக்க, லோஹான் ரத்­வத்தை ,குமார வெல்­கம, காமினி லொக்­குகே, சுசந்த புஞ்சி நிலமே, திலும் அமு­னு­கம, கீதா குமா­ர­சிங்க ,எஸ்.சந்­தி­ர­சேன, மஹிந்­தா­னந்த அலுத்­க­மகே, ரோஹித்த அபே­கு­ண­வர்­தன ,டலஸ் அழ­கப்­பெ­ரும ,மஹிந்த யாப்பா அபே­வர்­தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்­ணான்டோ உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­மையை அவ­தா­னிக்க முடிந்­தது.

இந்த போராட்­டத்­தில் பல்­வேறு பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் பெருந்­தொ­கை­யான மக்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது போராட்­டத்­திற்கு பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­மையை அவ­தா­னிக்க முடிந்தது.

இந்த போராட்டத்தின் காரணமாக கொழும்பின் நகர மண்டபம், மருதானை, கொம்பனிதெரு ,பொரளை, நாராஹேன்பிட்டிய ,கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இதன்காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டமையை அவதானிக்க முடிந்தது.

(Virakesari)

20160317092412 (1) 20160317092412 (2) 20160317092412 (3) 20160317092412 20160317092419 (1) 20160317092419 IMG_0205

LEAVE A REPLY