வட மேல் மாகாண சபை உறுப்பினர் டீ.எம்.தாஜிர் கைது

0
138

புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் சரத் விஜேசிங்கவை தாக்க முற்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் வட மேல் மாகாண சபை உறுப்பினர் டீ.எம்.தாஜிர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று பகல் தனது சட்டத்தரணிகளுடன் புத்தளம் பொலிஸில் சரணடைந்ததை அடுத்தே இவர் கைதாகியுள்ளார்.

நேற்று (16) மாலை புத்தளம் வலயக் கல்வி அலுவலகத்தில் வைத்து, டீ.எம்.தாஜிர் தன்னை தாக்க முற்பட்டதாக, புத்தளம் வலயக் கல்விப் பணிப்பாளர் சரத் விஜேசிங்க, பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக சம்பவம் நடந்த போது அங்கிருந்ததாக கூறப்படும் சிலரிடம் பொலிஸாரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதேவேளை, பாடசாலை சிலவற்றிலுள்ள ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்காக வலயக் கல்வி அலுவலகத்திற்கு சென்றிருந்தபோது, வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியதாக, வட மேல் மாகாண சபை உறுப்பினர் டீ.எம்.தாஜிர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்தநிலையில் கைதுசெய்யப்பட்ட தாஜிரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY