2009ல் பெண் துஷ்பிரயோகம்; மூவருக்கு மரண தண்டனை

0
158

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை

நுவரெலியா மேல் நீதிமன்றத்தினால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண் ஒருவரை கடத்தி துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலே, இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு இது குறித்து விசாரணை செய்த பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 24, 32 மற்றும் 35 வயதான சகோதரர்கள் எனத் தெரியவந்துள்ளது.

(Virakesari)

LEAVE A REPLY