இலங்கை அணி முன்னேற்றம் அடைந்துள்ளது; ஃபோர்ட் மகிழ்ச்சி: ஆப்கான் – இலங்கை இன்று மோதல்

0
221

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னேற்றம் குறித்து மகிழ்ச்சியடைவதாக, இலங்கையின் பயிற்றுநரான கிரஹம் போர்ட் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்திலும் இந்தியாவிலும் இருபதுக்கு-20 போட்டித் தொடர்களில் தோல்வியைச் சந்தித்த இலங்கை அணி, ஆசியக் கிண்ணப் போட்டிகளிலும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. உலக இருபதுக்கு-20 தொடரின் பயிற்சிப் போட்டிகளில் பாகிஸ்தானையும் நியூசிலாந்தையும் சந்தித்த இலங்கை அணி, அதிக கேள்விகளை எழுப்பியிருந்தது. ஆனால், அப்போட்டிகள் இரண்டிலும் இலங்கை வெளிப்படுத்திய திறமை குறித்து, போர்ட் திருப்தியடைந்துள்ளார்.

‘நாங்கள், சிறந்த முன்னெற்றத்தை அடைந்து வருவதாக நினைக்கிறேன். கடைசிப் போட்டியைப் பார்த்தீர்களானால், அப்போட்டியை நாங்கள் கட்டுப்படுத்தியிருந்தோம். 16 ஓவர்களின் பின்னர் பாகிஸ்தான் அணி 106 ஓட்டங்களுடன் காணப்பட்டது. அதை நாங்கள் சிறப்புடன் முடித்திருந்தால், அப்போட்டியை வெல்வதற்கான சிறந்த வாய்ப்பை நாம் கொண்டிருக்க முடியும் என்றார்.

திலகரட்ண டில்ஷானை ஆரம்பத்தில் இழந்த பின்னர் சந்திமாலும் திரிமான்னவும் விளையாடிய விதம் சிறப்பானது எனத் தெரிவித்த அவர், 11 தொடக்கம் 15 ஓவர்கள் வரையிலான காலப்பகுதியிலேயே அதிக விக்கெட்டுகளை இழந்திருந்ததாகத் தெரிவித்தார்.

உலக இருபதுக்கு-20 தொடரின் நடப்புச் சம்பியன்களாக இலங்கை அணி, அப்பட்டத்தைத் தக்க வைப்பதற்கான அதிக வாய்ப்புகளுடன் இல்லை என்பதை ஏற்றுக் கொண்ட அவர், ஆனால், அதற்காக வெற்றி பெற முடியாது எனத் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

இலங்கை-ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றது.இந்த ஆட்டம் கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் இடம்பெறுகிறது.

LEAVE A REPLY