கஞ்சாவுடன் இளைஞர் கைது

0
63

A.H.A.HUSSAIN

மட்டக்களப்பு மாவட்டம், ஏறாவூர் பொலிஸ் பிரிவில் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றதின் பேரில் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில் இந்தக் கைது இடம் பெற்றுள்ளது.

எறாவூர் பெண் சந்தை வீதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த 24 வயதான சந்தேக நபரிடமிருந்து 5250 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் அந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY