மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏ அணி சம்பியன்

0
248

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திருகோணாமலை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த 12 சனிக்கிழமை திருகோணாமலை நீதிமன்றத்திற்கு அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி கிரிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் சார்பில் மட்டக்களப்பு ஏ அணியும்,மட்டக்களப்பு பீ அணியும் திருகோணாமலை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் சார்பில் திருகோணாமலை ஏ திருகோணாமலை பீ அணியும் மோதின.

இருந்த போதிலும் இறுதிப் போட்டிக்கு மட்டக்களப்பு ஏ அணியும் திருகோணாமலை ஏ அணியும் தெரிவு செய்யப்பட்டது.

இதில் மட்டக்களப்பு ஏ அணி வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை சூவீகரித்துக்கொண்டது.

குறித்த கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டு முதலாவது இடத்தை பெற்ற மட்டக்களப்பு ஏ அணிக்கான வெற்றிக் கிண்ணத்தை அதன் அணித் தலைவரும், மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் செயலாளருமான ஏ.லிங்கேஸ்வரனுக்கு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் வை.தர்மரட்ணம் வழங்கி வைத்தார்.

இச் சினேகபூர்வ மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர் ரீ.பத்மராஜா, திருகோணாமலை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பிரதம பொறியியலாளர் ரீ.மோகனதாஸ், அதன் நிறைவேற்றுப் பொறியியலாளர் திருமதி. ஜெசுதாஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாணக் கணக்காளர் எம்.ஏ.எம்.சுஹைர் உட்பட வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர் நலன்புரி சங்கத்தின் மட்டக்களப்பு,திருகோணாமலை மாவட்டஉறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

1-RDA -1 (1) 1-RDA -1 (3) 1-RDA -1 (5) 1-RDA -1 (8)

LEAVE A REPLY