குடியேறிகளின் ஆபத்தான கடற்பயணங்கள் அதிகரிப்பு: ஐரோப்பிய ஒன்றியம்

0
185

லிபியாவிலிருந்து இத்தாலிக்கு அபாயகரமான படகுப் பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதாக மத்திய தரைக்கடல் பகுதியில் ஆட்கடத்தல்காரர்களை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படைப் பிரிவு தெரிவித்திருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களில் இந்தப் படையினர் 2 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை மீட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் சஹாராவுக்குத் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் மிக மோசமான படகுகளில் பயணங்களை மேற்கொண்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவேனிற் காலப் பகுதியில் கடலில் பருவநிலை மேம்படும் என்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளும் குடியேறிகளும் கடலைக் கடக்கக் காத்திருப்பதாக ராணுவப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை விடப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்குச் செல்லும் வழியைத் தேர்வுசெய்கின்றனர்.

LEAVE A REPLY