வங்கதேசத்துக்கு 202 ஓட்டங்களை இலக்காக கொடுத்தது பாகிஸ்தான்

0
206

உலகக்கிண்ண டி20 தொடரில் பாகிஸ்தான்- வங்கதேசம் அணிகள் மோதும் லீக் போட்டி கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக சர்ஜல், ஷேஷாட் களமிறங்கினர்.

சர்ஜல் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நிதானமாக ஆடிய ஷேஷாட் (52) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த அப்ரிடி, ஹபீஸ் வங்கதேச பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர்.

ஹபீஸ் 42 பந்தில் 64 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), அப்ரிடி 19 பந்தில் 49 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

உமர் அக்மல் (0) நிலைக்கவில்லை. மாலிக் (15), இமாட் வாசிம் (0) ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 201 ஓட்டங்களை குவித்தது.

வங்கதேச அணி தரப்பில், டஸ்கின், அரபட் தலா 2 விக்கெட்டுகளையும், சபீர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

LEAVE A REPLY