வரலாற்றை நிறையபேர் படிப்பார்கள், பலர் எழுதுவார்கள், மிகச் சிலர் இடம்பெறுவார்கள், ஒரு சிலரால் மட்டுமே வரலாறு மாற்றப்படும்

0
243

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாடு நாடாளாவிய ரீதியில் ஒவ்வொரு நாளும் பிரபல்யம் அடைந்து கொண்டு இருக்கின்றது. அத்தோடு மட்டுமல்லாமல் இம் மாநாடு பல சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி பதிவு செய்யப்பட்டு 27 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இதுவரைக்கும் 18 மாநாடுகள் இடம்பெற்றன.

இம்மாநாடுகளுக்கெல்லாம் சவால் விடும் வகையில் பாலமுனை தேசிய மாநாடு அமையப்போகின்றது.

ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் பாலமுனையைப் பற்றி பல கனவுகளை கண்டார் அதில் ஒன்றுதான் “பால்நிலவில் பாலமுனையில் ஒரு பெருவிழா “என்ற விழாவை நடத்தவேண்டும் என எண்ணியிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்விழா நடைபெறவில்லை ஆனால் தலைவர் கண்ட கனவை “பாலமுனையில் தேசிய மாநாடு” என்ற விழாவை நடாத்தி தலைவரின் கனவை நிறைவேற்ற இருக்கின்றார் முன்னால் தவிசாளர் அன்சில்.

மாபெரும் தலைவர் மர்ஹூம் அஸ்ரப் மரணித்ததன் பின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாடு ஒன்றில் இலங்கை ஜனநாயக சோலிச குடியரஸின் ஜனாதிபதியும் , பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொள்ள இருப்பது இதுவே முதற்தடவையாகும். அத்துடன் இச்சம்பவம் பாலமுனை வரலாற்றிலும், பாலமுனை ஏடுகளிலும் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.

அத்தோடு இம்மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் ஒழுங்குகளையும் பாலமுனையை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுவும், பாலமுனையின் அனைத்து அமைப்புக்களும், பாலமுனையில் உள்ள அனைத்துக் கட்சியினரும் அத்தோடு பாலமுனை மக்களால் விரும்பப்பட்டும், நேசிக்கப்பட்டும் இவ்விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதுவரைக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பல கட்சிகளும் , சிவில் அமைப்புக்களும் தங்களுடைய கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்த வண்ணம் இருக்கின்றது. ஆனால் இது நாள்வரைக்கும் இதைப் பற்றி முஸ்லிம் காங்கிரஸ் எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை.

மாறாக இந்த மாநாட்டில் ஜனாதிபதிக்கும் ,பிரதமருக்கும், எதிர்கட்சி தலைவருக்கும் முன்னிலையில் இந்த நாடே எதிர்பாத்துக் கொண்டிருக்கும் பாலமுனை தேசிய மாநாட்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துக்களையும் எண்ணங்களையும் அவர்களின் முன்னிலையில் தலைவர் றவூப் ஹக்கீம் வெளியிடவுள்ளார். இதில் சிறுபான்மை மக்களின் காப்புறுதி பாதுகாப்பு, உரிமை, சட்டம், மதஅனுஷ்டானங்கள் என்பனவும் உள்ளடக்கப்படும்.

முன்னால் தவிசாளர் அன்சில் இம் மாநாட்டை நடத்தும் உரிமத்தை நமக்கு பெற்று தந்து இன்று பாலமுனை எனும் கிராமத்தை தேசியரீதியில் பேசும் பொருளாக ஆக்கிவிட்டார்.

இம்மாநாடு நடைபெற இருக்கின்ற காரணத்தினால் முன்னால் தவிசாளர் அன்சிலினால் பாலமுனையில் என்னிலடங்காத அபிவிருத்திகளும் சேவைகளும் இடம்பெற்றுக்கொன்டிருக்கின்றன.

அத்தோடு பாலமுனை மண் அலங்காரப்பொருளாக காட்சிப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. மறைந்த தலைவர் அஷ்ரபின் காலத்தின் பின்னர் இன்று முஸ்லிம் காங்கிரஸ் பல அமைச்சுக்களையும், முதலமைச்சரையும், மாகாண சபை அமைச்சர்களையும் கொண்டு வீரியமிக்கதாக காணப்படுகின்ற சந்தர்ப்பத்தில் எழுச்சியான மாநாடாகும்.

இக் கட்சி அரசியல் கட்சியாக பதியப்பட்டு 28 வருடங்கள் கடந்துள்ள நிலையில் இம் மண்ணுக்கு இவ்வரம் கிடைத்துள்ளது இவ்வரம் கிடைப்பதை தடுப்பதற்கு பல காழ்புணர்ச்சிக்குரிய விடயங்களை சிலர் மேற்கொண்டிருந்தனர். அதையெல்லாம் தவிடுபொடியாக்கினார் முன்னால் தவிசாளர் அன்சில். இன்ஷாஅல்லாஹ் இனி ஒரு தேசிய மாநாடு இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கின்றதா இல்லையா எனதெரியாது.

ஆனால் இவ்வாறான பிரமாண்ட மாநாட்டினை நடாத்தும் சந்தர்ப்பம் எமக்கு கிடைத்திருக்கின்றது அல்ஹம்துலில்லாஹ். இம் மாநாட்டினை சிறப்புற நாடத்துவது எங்களுடைய தார்மீக பொறுப்பாகும்.

அத்தோடு மட்டுமல்லாமல் இச் சிறிய கிராமத்திலிருந்து அரசியல் எழுச்சிக்கும் வித்திட்டார் என்றால் மிகையாகாது.

ஆனால் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினுடைய தேசிய மாநாட்டு ஏடுகளில் பாலமுனையையும் இனைத்து வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். அத்தோடு மட்டும் இல்லாமல் தேசிய ரீதியில் இக்கிராமத்திற்கு அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிட்டார்.

இவரின் சேவை இக்கிராமத்திற்கு அளப்பரியது ஆகும். இவர் மூலம் இன்னும் பல அடையாளங்களும் அபிவிருத்திகளும் கிடைக்கவேண்டிமென்று  அல்லாஹ்வை பிராத்திக்கின்றோம்.

LEAVE A REPLY