நைஜீரியாவில் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி

0
135

நைஜீரியாவின் வட-கிழக்கு பகுதியில் உள்ள மைதுகுரியில் இருக்கும் பள்ளிவாயலில் இன்று அதிகாலை தொழுகையின்போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களே தற்கொலைப்படைதாரிகளாக செயல்பட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். முதலாவது பெண் பள்ளிவாயலுக்குள் புகுந்து வெடித்தவுடன், பலரும் தப்பி வெளியில் ஓடிவரும்போது இரண்டாவது குண்டுதாரி வெடித்ததாக இந்தச் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் 17க்கும் மேற்பட்டோர் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.

அதிகாலையில் தொழுகை துவங்கியவுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக உமராரி பள்ளிவாயலின் தலைமை இமாம் தெரிவித்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக அங்கு நடந்துகொண்டிருக்கும் உள்நாட்டுப் போரில், போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து இந்நகரின் மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.

LEAVE A REPLY