உலகின் சிறந்த ஆசிரியராக பலஸ்தீனின் ஹனான் அல்ஹரூப்!

0
136

பலஸ்தீனின் அகதிக் கூடாரங்களுக்குள் இருந்துகொண்டு பலஸ்தீனியப் பிஞ்சுகளின் கல்வியை மேம்படுத்தப் பாடுபட்டுக்கொண்டிருக்கும் ஆசிரியையான ஹனான் அல்ஹரூப் உலகளாவிய ரீதியில் சிறந்த ஆசிரியைக்கான விருதினைத் தனதாக்கியுள்ளார். அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை ஒரு மில்லியன் டாலர்களாகும்.

அவரோடு இவ்விருதினைப் பெற பிரிட்டன், இந்தியா, கென்யா, பின்லாந்து, அமேரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் ஆசிரியர்கள் கடுமையாகப் போட்டியிட்டனர். அதற்கு மத்தியில் இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறிப்பாக ஆயிரக்கணக்கான கணித வீடியோக்களை யூடியூப்பில் பதிவேற்றிய பிரித்தானிய ஆசிரியர் இவருக்குக் கடும் சவால்மிக்க போட்டியாளராக விளங்கினார். பலஸ்தீனின் பைத்துல்லஹ்ம் பிரதேசத்தில் கடும் கஷ்டத்துக்கு மத்தியில் பிறந்து வளர்ந்த ஹனான் ஹரூப் ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் சவால் மிக்க கல்வியுட்டும் பணியை சிறப்பாக நிறைவேற்றிய சாதனையாளராவார்.

அல்முஜ்தமஃ அரபு சஞ்சிகையின் முன்னாள் ஆசிரியர் ஷஃபான் அப்துர்ரஹ்மான் (Sha’ban Abdelrahman) இவரை முகாம்களின் மகள் என வர்ணித்து தனது முகநூலில் எழுதியிருந்தார். குறித்த நிகழ்வில் ஹனான் ஹரூப் உலகின் மாற்றத்துக்கான அச்சாணியாக பாடசாலையைக் குறிப்பிட்டார். பலஸ்தீனில் கல்விக்காக உழைத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களில் இவர் குறிப்பிடத்தக்க ஒருவர்… அரபுலகில் கல்வியறிவில் மிக உச்சத்தில் இருப்பது பலஸ்தீன் தான் என்பது அவர்களது உச்சகட்ட தியாகத்திற்கு சான்று. இங்கு இது போன்ற அற்புதங்களை நிகழ்த்துவதற்கான இயலாமைகள் எதுவுமே இல்லை என்பதே நிதர்சனமாகும்.

LEAVE A REPLY