கொழும்பு பல்கலை கழகத்தின் பெளதீகவியல் (Physics) பேராசிரியர் SRD Rosa வின் உயர்தர மாணவர்களுக்கான விஷேட இலவச கருத்தரங்கு

0
139

(அஹமட் இர்ஷாட்)

இவ்வருடம் (2016 ) Math & Bio பிரிவில் உயர்தரம் எழுதும் மாணவர்களுக்கான பெளதீகவியல் பாடத்திற்கான ( Physics) விஷேட கருத்தரங்கு 09.04.2016  சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் BCAS மட்டக்களப்பு வளாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இக்கருத்தரங்கில் கொழும்பு பல்கலை கழகத்தின்  Physics துறை  பேராசிரியர் SRD Rosa அவர்கள் கலந்து கொண்டு முற்றிலும் இலவசமான முறையில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பெளதீகவியல் பாடத்திற்கான இறுதி செயல் அமர்வினை நடாத்துவதோடு 2016ம் ஆண்டு உயர்தர பரீட்சை பெளதீகவியல் (Physics) பாடத்திற்கான எதிர்பார்க்கை வினாக்களுடன் பெறுமதிமிக்க விரிவுரைகளை வழங்க இருப்பது முக்கியமான விடயமாகும்.

எனவே உயர் தர விஞ்ஞான கணித பிரிவில் கல்வி கற்கின்ற மாணவர்களை இவ்விஷேட இலவச கருத்தரங்கில் கலந்து கொண்டு பயண்பெருமாறு BCAS மட்டக்களப்பு வளாகம் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY