முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு பெண்களே செலுத்திய விமானம்

0
201

சவுதி அரேபியாவுக்கு முதன்முறையாக பெண்கள் விமானம் செலுத்தி சென்றனர்.

அரபு நாடான சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லை. அதை மீறி கார் ஓட்டுவது குற்றமாக கருதப்பட்டது. அங்கு ஆண்கள் மட்டுமே கார் ஓட்டமுடியும். மீறி கார் ஓட்டும் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதை எதிர்த்து சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் பெண்களே இயக்கிய விமானம் சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா  நகரில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.  ராயல் புருனே ஏர்லைன்சை சேர்ந்த 3 பெண் விமானிகள் சவுதி அரேபியா மண்ணில் தாங்கள் செலுத்தி விமானத்தை பத்திரமாக தரை இறக்கி வரலாற்று சாதனை நிகழ்த்தினர்.

புருனேயின் தேசிய தினமான சுதந்திர தினநாளில் இம் மைல்கல் சாதனை நிகழ்த்தினர். ‘போயிங் 787 டிரீம் லைனர்’ விமானம் புருனேயில் இருந்து ஜித்தாவுக்கு இயக்கப்பட்டது.

அதை கேப்டன் ஷரிபா சரீனா தலைமையில் சரீனா நோர்டின், டிக் நாடியா பிக் கசீம் ஆகிய 3 பெண் பயணிகள் செலுத்தினர். இவர்களில் கேப்டன் ஷரீனா சரீனா 2013–ம் ஆண்டு இங்கிலாந்தில் விமானி பயிற்சி பெற்றார். இவரே புரூனே நாட்டின் முதல் பெண் விமானி ஆவார்.

LEAVE A REPLY