காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

0
150

ஏ.எச்.ஏ. ஹு ஸைன்

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஒருவர், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதியே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதி எல்லையில் வியாபார நிலையமொன்றின் மீது டிப்பர் வாகனம் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தினால் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நகரசபை வாகனங்கள் இரண்டுக்கும் சேதம் ஏற்பட்டதாக குறிப்பிடும் காத்தான்குடி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

dd83f9d2-55ae-46a1-ae25-3c3a9b76f972 fcc5cef4-afc5-4f4c-8556-7cfbf8140633

LEAVE A REPLY