காத்தான்குடியில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை பார்வையிட்டார் ஷிப்லி பாறூக்

0
175

மனிதநேய ஒன்றியங்களின் கூட்டமைப்பு(CHA) நிறுவனம் மற்றும்  கிழக்கு மாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஆகியோர் இணைந்து காத்தான்குடியில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய இடங்களை பார்வையிடும் நிகழ்வொன்று கடந்த ஞாயிறு(13.03.2016) அன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கடலரிப்பினால் அதிகம் பாதிப்படைந்த ஏத்துக்கால் கடற்கரை மற்றும் பிர்தௌஸ் பள்ளிவாயலை அண்மித்த வடிகான் அமைந்துள்ள பிரதேசம் என்பன பர்வையிடப்பட்டதோடு மீனவர்கள் மற்றும் பிரதேச மக்களுடனான சந்திப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது எதிர்வரும் காலங்களில் மீனவர்கள் தாங்கள் பிடிக்கின்ற மீன்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யக்கூடிய சிறப்பு சந்தை ஒன்றை அமைத்தல், அனர்த்தங்கள் தொடர்பான விழிப்புணர்வு பயிற்ச்சிகளை வழங்குதல், ஆழ்கடல் அனர்த்தங்களின்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகள் தொடர்பான பயிற்ச்சி, சிறு வியாபாரிகளின் வியாபார மேம்படுத்தல் ஆலோசனைகள், பாரம்பரிய வியாபாரத்திற்கு பதிலாக நவீன முறையில் வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்கள், பெண்களுக்கான விஷேட அனர்த்த முகாமைத்துவ பயிற்ச்சி நெறிகள் மற்றும் பல அரச சார்பற்ற நிருவனங்களினுடாக அனர்த்தங்களின் போது முன்னெடுக்கக்கூடிய பாதுகாப்பு அபிவிருத்தி பணிகள் போன்றவற்றை கிழக்குமாகான சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் அவர்களுடைய பூரணஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டலுடன் மனிதநேய ஒன்றியங்களின் கூட்டமைப்பு(CHA) நிறுவனத்தினர் காத்தான்குடியில் இனங்காணப்பட்ட பல்வேறு இடங்களில் முன்னெடுப்பதற்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY