அப்ரிடி இந்தியாவை புகழ்ந்து பேசியது குறித்து வக்கார் யூனிஸ் கருத்து

0
481

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார்.

இந்த பேட்டி அப்ரிடிக்கு பெருத்த தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. அப்ரிடியின் கருத்து வெட்கக்கேடானது என்று முன்னாள் கேப்டன் ஜாவித் மியாண்டட் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவிக்கையில், ‘என்னை பொறுத்தமட்டில் அப்ரிடி சொன்னதில் சர்ச்சை எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அவரது மனதில் பட்டதையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தி இருக்கிறார். நாங்கள் இந்த விவகாரத்தை தள்ளிவைத்து விட்டு, தரமான கிரிக்கெட்டை விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே சிறந்த திட்டமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY