செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் சேவை நலன் பாராட்டு விழா

0
201

மட்டக்களப்பு மாவட்டத்தின், செங்கலடிப்பிரிவு மாகாண நீர்ப்பானப் பொறியியலாளர் அலுவலகத்தின் நலன்புரிச்சங்கத்தினால் செங்கலடி நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்திலிருந்து கடமையாற்றி ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களை பராட்டி கௌரவிக்கும் விழா 2016.03.15ஆந்திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.

இவ்விழாவானது செங்கலடி மா/நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. ஏ. பிரசாந் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக மா/பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எம். வடிவேல் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக மா/பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. வீ.பீ.பீ. தனராஜசிங்கம் மற்றும் மா/பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். கனேசலிங்கம் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இவ்விழாவில் தலைமையுரையாற்றிய செங்கலடி மா/நீர்ப்பாசனப் பொறியியலாளர் எந்திரி. ஏ. பிரசாந் .. நலன்புரிச்சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் எமது அலுவலகத்திலிருந்து கடமையாற்றி ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றுச்செல்லும் அலுவலகர்கள் இவ்வலுவலகத்தில் கடைமையாற்றிய காலத்தில் மிகவும் நேர்மையான முறையிலும் நேர்த்தியான முறையிலும் சிறப்பாக கடமையாற்றியவர்களாவர். இவர்களின் பிரிவு இவ்வலுவலகத்தில் ஈடுசெய்ய முடியாத ஓர் பிரிவாகவே என்னால் நோக்கமுடிகின்றது என தனதுரையில் தெரிவித்தார்.
தலைமையுரையினைத் தொடர்ந்து இவ்வலுவலகத்தில் ஓய்வு பெற்றுச்சென்ற பிரிவு உதவியாளர் திரு. எஸ்.ஈ. ரவீந்திரா, பிரதம முகாமைத்துவ உதவியாளர் திரு. ஆர். பிரிதிவிராஜ், பராமரிப்பு ஊழியர்கள் திரு. ஏ. பத்மநாதன் மற்றும் திரு. கே. கிருஸ்னமூர்த்தி ஆகியோரும் இடமாற்றம் பெற்றுச்சென்ற தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் திரு. ஆர். ரகுணன், திரு. டீ. மதியழகன் மற்றும் பராமரிப்பு ஊழியர் திரு. எஸ். கௌரிசங்கர் ஆகியோர் பராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் பிற்பாடு இவ்விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகைதந்த கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி. எஸ். திலகராஜா அவர்கள் உரையாற்றும்போது… இவ்அலுவலகத்தினால் இப்படியானதொரு விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுவது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவ்விழாவினை பார்க்கும்போது இவ்அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் ஒரு கூட்டு குடும்பத்தினைப்போல் கடமைமாற்றியுள்ளார்கள் என்பது எனக்கு எடுத்து காட்டுகின்றது.
ஓய்வு மற்றும் இடமாற்றம் பெற்றும் செல்லும் ஊழியர்கள் இவ்வலுவலகத்தில் கடமையாற்றிய காலத்தில் அவர்களால் ஆற்றப்பட்ட சேவைகள் எப்போதும் நினைவு கூர்ந்ததாகவே காணப்படும் இதற்கு உதாரணமாகத்தான் இன்றைய நிகழ்வை சுட்டிக்காட்டலாம்.
மேலும் பொதுவாக அலுவலகங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் தங்களின் தரத்தினை பதவி வழியில் உயர்த்திக்கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் இதனை ஏன் கூறுகின்றேன் என்றால் தான் ஆரம்பத்திலிருந்து ஓய்வு பெறும் காலம் வரை தனக்கு ஆரம்பத்தில் கிடைத்த பதவியில் மாத்திரம் கடமையாற்றிவிட்டு ஓய்வு பெறுகின்றனர்.
தாங்கள் மென்மேலும் பதவிகளை உயர்த்திக்கொள்ள கூடுதலான ஊழியர்கள் முயற்சிகளை மேற்கொள்வதில்லை இதுதான் நடைமுறையும் கூட இவ்வாறு இல்லாமல் தனது திறமைக்கேற்றாப்போல் முயற்சிகளை மேற்கொண்டு உயர்ந்து விளங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஏனைய விருந்தினர்களாக செங்கலடிப்பிரிவு மாகாண நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.
எம்.ரீ. ஹைதர் அலி

LEAVE A REPLY