எட்டு நாய்க் குட்டிகள் அடித்துக் கொலை: பாணந்துறை முன்னாள் தவிசாளர் மீது முறைப்பாடு

0
135
(பாணந்துறை – அப்துல்லாஹ்
எட்டு நாய்க் குட்டிகளை அடித்தக் கொன்றது தொடர்பில் பாணந்துறை முன்னாள் முஸ்லிம் தவிசாளர் மீது பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிறந்து சில நாட்களேயான எட்டு நாய்க்குட்டிகளை பொல் மற்றும் கற்களினால் அடித்துக் கொன்றதுடன் தனது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களையும் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலே இவர் மீது பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாணந்துறை சரிகமுல்லையில் , முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள வளவொன்றில் ஒரு நாய் 12 குட்டிகளை ஈன்றுள்ளது. இக்குட்டிகளை அவதானித்த இவர் நாய்குட்டிகiளுக்கு தினமும் சித்தரவதை செய்ததுடன் 08 குட்டிகளையும் ஒவ்வொன்றாக அடித்துக்கொன்றுள்ளார்.
இவர் நாய்க்குட்டிகளை சித்தரவதை செய்து உயிருடன் பொல்லால் அடித்துக் கொல்லும் போது அயல் வீட்டார் இவரை தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் தவிசாளர் குறித்த அயல் வீட்டாரை அதிகார தொணியில் ஏசியதுடன் இவர்களின் வாகனத்தின்  மீதும் பெரிய கற்களைக் கொண்டு அடித்து கண்ணாடியை உடைத்துள்ளார்.
இவர் குறித்த அயல் வீட்டாரின் லொறியின் முன் கண்ணாடியை உடைத்தமை தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் பாணந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்தமை தொடர்பில் இவரது குடும்பம் குறித்த அயல் வீட்டாருக்கு அச்சுறுத்தல் விடுத்துச் சென்றுள்ளனர்.

LEAVE A REPLY