(Flash) மின் கசிவு; முஸ்லிம் குடும்பம் ஒன்றின் 4 பேர் வபாத்

0
206

தெஹிவளை, கெளடான வீதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இல 40, தெஹிவளை, கெளடான வீதி எனும் முகவரியைக் கொண்ட 3 மாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ் மாடியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக, முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த குறித்த நால்வரும் [தந்தை(வயது 65), தாய்(வயது 52), மகள்(வயது 13), உறவுக்கார சிறுமி(வயது 13)] மரணமடைந்துள்ளதோடு, அவர்களது உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்ற வேளையில், வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி, மகள் மற்றும் அவர்களது உறவினரின் மகள் ஒருவருமே அவ்வீட்டில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயம் எவ்வாறு இடம்பெற்றது என இன்னும் தெரியவில்லை எனத் தெரிவித்த தெஹிவளை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

944855_899220520196113_6491973963939124748_n

LEAVE A REPLY