நீரிழிவு நோய்க்கு புதிய மருத்துவ முறையை கண்டுபிடித்து விஞ்ஞானிகள் சாதனை

0
210

நீரிழிவு நோய்க்கு புதிய மருத்துவ முறையை கண்டுபிடித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர்.

மனிதர்களுக்கு உண்டாகும் கொடிய நோய்களுள் நீரிழிவு நோயும் ஒன்றாகும். இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவ முறைகள் காணப்படுகின்ற போதிலும், முற்றாக குணப்படுத்தும் முறைகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில் இந் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி போடுதல் மூலம் ஏற்றப்படும் இன்சுலினிற்கு பதிலாக புதிய முறை ஒன்றினை North Carolina பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அதாவது ஒட்டும் பட்டி (Patch) ஒன்றின் ஊடாக இன்சுலின் செலுத்தப்படும் இப் புதிய முறையானது வலிகளை ஏற்படுத்தாது என்பதுடன், 10 மணி நேரம் நீடித்து பயன்தரக்கூடியதாக இருக்கின்றது.

எனினும் இப் புதிய முறை தற்போது எலிகளில் மட்டுமே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை மனிதர்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY