இந்தியாவை புரட்டிப்போட்டது நியூஸிலாந்து

  0
  263

  ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர்-10 போட்டிகள் நேற்று ஆரம்பமாகின.

  தொடரை இந்திய அணி ஏமாற்றத்துடன் துவக்கியது.

  பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால், நியூசிலாந்திடம் 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

  இந்தியாவில் 6வது உலக கோப்பை ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. ‘சூப்பர்–10’ சுற்று போட்டிகள் நேற்று துவங்கின. நாக்பூரில் நடந்த ‘பிரிவு–2’ ல் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் லீக் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது.

  ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

  அஷ்வின் நம்பிக்கை:

  நியூசிலாந்து அணிக்கு கப்டில், வில்லியம்சன் ஜோடி துவக்கம் கொடுத்தது. அஷ்வின் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை கப்டில் சிக்சருக்கு அனுப்பினார். அடுத்த பந்தில் கப்டிலை (6) அவுட்டாக்க, ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நெஹ்ரா வேகத்தில் முன்ரோ (7) வெளியேறினார்.

  வில்லியம்சன் (8 ரன், 16 பந்து), அனுபவ ராஸ் டெய்லர் (10) ஏமாற்றினர். நீண்ட நேரமாக போராடிய ஆண்டர்சனை (34 ரன், 42 பந்து), பும்ரா போல்டாக்கினார். சான்ட்னர் (18), எலியட் (9) சீரான இடைவெளியில் கிளம்பினர். நியூசிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது. ரான்கி (21) அவுட்டாகாமல் இருந்தார்.

  சபாஷ் சான்ட்னர்:

  எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி தான். ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆடி வெறுப்பேற்றினர். ஷிகர் தவான் (1) அவுட்டான, சில நிமிடங்களில் ‘ஜூனியர்’ வெட்டோரி என்றழைக்கப்படும் சான்ட்னர் ‘சுழலில்’ ரோகித் சர்மா (5) வெளியேறினார்.

  இதே ஓவரில் ரெய்னாவும் (1) அவுட்டானார். யுவராஜ் சிங் (4) நாதன் மெக்கலத்திடம் ‘பிடி’ கொடுத்தார். அணிக்கு கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லி 23 ரன்னுக்கு அவுட்டாக, இந்திய அணி தோல்விப் பாதையில் செல்லத் துவங்கியது.

  அடுத்த சிறிது நேரத்தில் பாண்ட்யா (1), ஜடேஜாவும் (0) தங்கள் பங்கிற்கு அதிர்ச்சி கொடுக்க இந்திய அணி 43 ரன்னுக்கு 7 விக்கெட் என, மீள முடியாத நிலைக்கு சென்றது.

  அஷ்வின் 10, போராடிய தோனி 30 ரன்கள் எடுத்தனர். கடைசியில் நெஹ்ரா ‘டக்’ அவுட்டாக, இந்திய அணி 18.1 ஓவரில் 79 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட் சாய்த்த சான்ட்னர் ஆட்டநாயகன் விருது வென்றார். இந்திய அணி வரும் 19ல் நடக்கும் அடுத்த போட்டியில்(கோல்கட்டா) பாகிஸ்தானை சந்திக்கிறது.

  India's Ashish Nehra (3rd R) celebrates with teammates after taking the wicket of New Zealand batsman Colin Munro during the World T20 cricket tournament match between India and New Zealand at The Vidarbha Cricket Association Stadium in Nagpur on March 15, 2016. / AFP / PUNIT PARANJPE    (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)
  India’s Ashish Nehra (3rd R) celebrates with teammates after taking the wicket of New Zealand batsman Colin Munro during the World T20 cricket tournament match between India and New Zealand at The Vidarbha Cricket Association Stadium in Nagpur on March 15, 2016. / AFP / PUNIT PARANJPE (Photo credit should read PUNIT PARANJPE/AFP/Getty Images)
  India's Rohit Sharma is stumped by New Zealand's Luke Ronchi during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India, Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)
  India’s Rohit Sharma is stumped by New Zealand’s Luke Ronchi during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India, Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)

  LEAVE A REPLY