நுரைச்சோலை மின்பிறப்பாக்கி இயந்திரங்களை இயக்க நடவெடிக்கை

0
188

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்களை இன்றிரவுக்குள் மீளவும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

செயலிழந்துள்ள மின்பிறப்பாக்க இயந்திரங்களினால் நாளை காலை முதல் மின் உற்பத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட குறிப்பிட்டார்.

இந்த மின் பிறப்பாக்க இயந்திரங்கள் மூலம் 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளது.

இதேவேளை, நாடு முழுவதும் இன்றும், நாளையும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் பிரகாரம் பகல்வேளையில் 5 1/2 மணித்தியாலங்களும், இரவில் இரண்டு மணித்தியாலங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டை A – B – C – D என நான்கு வலயங்களாகப் பிரித்து மினவெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன் அடிப்படையில், காலை 7.00 மணிமுதல் பிற்பகல் 12.30 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் ஒரு கட்டமாகவும்,

பிற்பகல் 12.30 முதல் மாலை 6.00 மணி வரையும், இரவு 8.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மற்றொரு கட்டமாகவும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் செயலிழந்துள்ளதை அடுத்து, ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியின் காரணமாகவே மின்வெட்டை அமுல்படுத்த நேரிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY