விமானம் விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலி

0
157

தென் அமெரிக்க நாடான ஈக்குவடார் இராணுவ விமானம் அமேசான் காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அந்த விமானத்தில் பயணம் செய்த 22 பேர் பரிதாபமாக பலியாகினர்.

இந்த தகவலை ஈக்குவடார் நாட்டு அதிபர் ரபேல் கொர்ரியா தெரிவித்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை கூறியுள்ள அவர் உயிர் பிழைத்தவர்கள் யாரும் இல்லை என்றும் அவர் கூறினார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 19 பயணிகளும், இரண்டு பைலட்டுகளும், ஒரு மருத்துவரும் இருந்தனர். பெருநாட்டு எல்லைக்கு அருகில் உள்ள பஸ்டாஸா மாகாணத்தின் வடக்கு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

பாராசூட் பயிற்சி பெறுவதற்காக இராணவ வீரர்கள் அந்த விமானத்தில் சென்று கொண்டிருந்ததாக அந்நாட்டு இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY