ஹைட்ரஜன் குண்டு வீசி மன்ஹாட்டன் நகரை சாம்பலாக்கி விடுவோம்: வடகொரியா

0
163

உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. எச்சரிக்கையையும் மீறி வட கொரியா தொடர்ந்து அவ்வப்போது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் கொரியா எல்லையில் அமெரிக்கக்கூட்டு படையினர் மற்றும் தென்கொரிய வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில், அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

இது தொடர்பாக வடகொரிய அரசாங்கத்தின் செய்தி ஊடகமான டிபிஆர்கே விடுத்துள்ள செய்தியில், “வட கொரியா தயாரித்துள்ள ஹைட்ரஜன் வெடிகுண்டு ரஷ்யா தயாரித்த வெடிகுண்டை விட ஆற்றல் வாய்ந்தது. கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையில் இந்த வெடிக்குண்டு பொருத்தப்பட்டு நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நகரில் விழச்செய்தால் சில நொடிகளில் அந்த நகரமே சாம்பல் ஆகிவிடும்” என்று தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டும் வடகொரியா அரசு தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது பல்வேறு நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY