மீண்டும் பிரேதப் பரிசோதனை; எம்பிலிபிடிய இளைஞனின் சடலம் கொழும்புக்கு

0
201

எம்பிலிபிடிய பகுதியில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த குடும்பஸ்தரான சுமித் பிரசன்னவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இன்று எம்பிலிபிடிய நீதவான் பிரசன்ன பிரனாந்து முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவரது சடலத்தை கடந்த 10ம் திகதியே தோண்டி எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. எனினும் அன்றையதினம் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரிக்கு சமூகமளிக்க முடியாது போனமையால், இன்றையதினம் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி இன்று காலை 06.00 மணிக்கு சடலத்தை மீள தோண்டி எடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, இதன்போது சுமித் பிரசன்னவின் தாய், சகோதரி மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவரது தாய் சடலத்தை அடையாளம் காட்டினார்.

இதனையடுத்து, சடலத்துடன் பெட்டி சீல் வைக்கப்பட்டதோடு, சடலத்தை மீண்டும் பிரேதப் பிரிசோதனைக்கு உட்படுத்த கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

-AD-

LEAVE A REPLY