4 வலய பிரிவுகளின் படி இரு நாட்கள் மின்வெட்டு

0
297

நான்கு வலய பிரிவுகளின் படி இலங்கையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் தற்போதைய நிலைமை குறித்து ஆராய, அங்கு சென்றிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி பிரிவு,

A – காலை 07.00 – 12.30 மற்றும் மாலை 06.00 – 08.00

B – பகல் 12.30 – 06.00 மற்றும் இரவு 08.00 – 10.00

(அத தெரண)

LEAVE A REPLY