ஐபோன் 7 எப்படி இருக்கும் தெரியுமா?

0
241

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் 7 Plus ஆகியவற்றின் வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பது வாடிக்கையாளர்களிடம் எப்போதும் எதிர்பார்ப்பை உருவாக்குவதுண்டு.

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் கைப்பேசி வரிசையின் அடுத்த இரண்டு இலக்கங்களான 7 மற்றும் 7 Plus ஆகியவற்றை வரும் செப்டம்பர் மாதம் வெளியிட உள்ளது.

இந்த இரு கைப்பேசி குறித்தும் வாடிக்கையாளர்கள் பல விதமான கருத்துக்களை உலவ விட்டு வருகின்றனர். ஆனால் அந்த இரு கைப்பேசிகளின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என வெளியான சில புகைப்படங்கள் உறுதி செய்துள்ளது.

தற்போது வெளியாகியிருக்கும் அந்த புகைப்படங்களில் ஒன்று ஐபோன் கைப்பேசியின் பின்புற வடிவமைப்பை காட்டுகிறது. இது தற்போதுள்ள ஐபோன் 6S கைப்பேசியை விடவும் வடிவமைப்பில் அதிக மாறுதலை கொண்டுள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை கைப்பேசிகளில் A10 Processor பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போதுள்ள கைப்பேசியை விடவும் அதிக RAM வசதியுடனும் புதிய கைப்பேசி வெளியாக உள்ளது.

மேலும் இந்த மாதத்தில் அப்பிள் நிறுவனத்தின் iPad Pro மற்றும் iPhone SE ஆகியவை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY