வேனில் இருந்து சடலங்கள் மீட்பு: கொலையை அரங்கேற்றிய சம்பவம் குறித்து அதிர்ச்சி

0
336

தங்­கொட்­டுவ, புஜ்­ஜம்­பொல – இர­ப­ட­கம பகு­தியில் உள்ள பாழ­டைந்த வீதி­யொன்றில் எரிந்த நிலையில் இருந்த வேனிலிருந்து பொலி­ஸாரால் மீட்­கப்­பட்ட 5 சட­லங்­களில் நேவி கபில எனப்­படும் கபில செனரத் பண்­டா­ரவின் சடலம் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. நேவி கபி­லவின் மனை­வியும் அவ­ரது உறவுக்­கார இளைஞர் ஒரு­வரும் குறித்த சட­லத்தை நேற்று நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் வைத்து அடை­யாளம் காட்­டி­யுள்­ளனர்.

நேவி கபி­லவின் வலது காலில் உள்ள உபா­தை­தொடர்பில் செய்­யப்­பட்ட சத்­திர சிகிச்­சையின் போது வைக்­கப்­பட்ட தகடு மற்றும் அவ­ரது கழுத்தில் இருந்த வெள்ளி சங்­கி­லி­ ஆ­கி­ய­வற்றைக் கொண்டே ச­டலம் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

தங்­கொட்­டுவ ஐவர் படு­கொலை தொடர்பில் பிர­பல வர்த்­தகர் ஒருவர் உள்­ளிட்ட 5 பேர் கைதா­கி­யுள்ள நிலையில் கொலை­யுண்டவர்கள் தொடர்­பி­லான பிரேத பரி­சோ­த­னைகள் நேற்று நீர்­கொ­ழும்பு பிர­தான சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் இடம்­பெற்­றது. இதன் போதே நேவி கபி­லவின் சடலம் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.

கொலை­யுண்ட ஏனையோர் தொடர்பில் மேல­திக விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரும் நிலையில் வத்­தளை பகு­தியைச் சேர்ந்த நைனா எனப்­படும் மொஹம்மட் நௌஷாட், பேலி­ய­கொட நீல், சூப்­புவா எனப்­படும் கந்­தானை கிரி­ஷாந்தா ஆகிய மூவரும் உள்­ள­டங்­கு­வ­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தக­வல்கள் தெரி­வித்­தன.

ஏனைய நபர் இரா­ணு­வத்தில் இருந்து தப்பி வந்­தவர் என தகவல் கிடைத்­துள்­ள­தா­கவும் அது குறித்து தொடர்ந்து விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

கொலை­யுண்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்ள ஐவரின் சட­லங்­க­ளையும் ஸ்கேன் பரி­சோ­தனை ஒன்­றுக்கு உட்­ப­டுத்தி அடை­யாளம் காண்­பது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்பட்­டுள்­ளது. கரு­கி­யுள்ள உட­லங்­களில் இருந்து டி.என். ஏ. மூலக் கூறு­களைப் பெற்று கொலை­யுண்­ட­தாக கரு­தப்­படும் நபர்­களின் உற­வி­னர்­களின் டி.என்.ஏ.உடன் ஒப்­பீடு செய்து அது தொடர்பில் உறு­தி­யான முடி­வுக்கு வருவது குறித்தும் பொலிஸார் ஆராய்ந்து வரு­வ­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

கடந்த 11 ஆம் திகதி திங்­க­ளன்று தங்­கொட்­டுவ பொலி­ஸா­ருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் எரிந்த வேனில் இருந்து 5 சட­லங்கள் மீட்­கப்­பட்­டன. வேனின் இலக்­கத்தை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணை­களில் நேவி கபில என்ப­வரின் கட்­டுப்­பாட்­டி­லேயே குறித்த வேன் இறு­தி­யாக இருந்­தமை உறு­தி­யான நிலை­யிலும், கபி­லவின் மனை­வியின் முறைப்­பாட்­டுக்கு அமை­வா­கவும் விசா­ர­ணைகள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் சமந்த விஜே­ரத்­னவின் கீழ் 7 குழுக்கள் இது தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தன.

இதன்போது நேவி கபி­லவின் தொலை­பேசி அழைப்புப் பட்­டி­யலை பொலிஸார் சோத­னைக்கு உட்­ப­டுத்­தினர். இக்­கொலை இடம்­பெற்ற­தாக நம்­பப்­படும் இரவு இறு­தி­யாக நேவி கபி­ல­வுடன் தொடர்பில் இருந்தோர் தொடர்பில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அவ­தானம் செலுத்­தினர்.

இதன்போது தங்­கொட்­டுவை பிர­தே­சத்தைச் சேர்ந்த வர்த்­த­க­ர் ஒருவருடன் இறுதி­யாக நேவி கபில தொடர்பு கொண்டுள்ளமையும் அந்த தொலை­பேசி உரை­யா­டலின் போது அந்த வர்த்தகர் தங்­கொட்­டுவ பகு­தி­யி­லேயே இருந்­துள்­ள­மையும் உறு­தி­யா­னது.

இந் நிலை­யி­லேயே குறித்த வர்த்தகரை கைது செய்ய தயாரான நிலையில் பொலிஸார் அவர் பன்­னல பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்­துள்ளார். இத­னை­ய­டுத்து அவரை பொறுப்­பேற்ற குற்றப் புல­ன­ாய்வுப் பிரி­வினர் கொலையின் போது உத­விய சமிந்த என்ற கொலை குற்றச் சாட்டு உள்ள நபர் உள்­ளிட்ட நால்­வ­ரையும் கைது செய்­தனர்.

சம்பவ தினம் இரவு முதலில் நேவி கபி­லவே குறித்த வர்த்தகருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்­துள்­ள­மையும், இதன் போது இரவு மது­பான விருந்­தொன்றை ஏற்­பாடு செய்­யு­மாறு மஞ்­சு­வுக்கு கூறி­யுள்­ள­மையும் விசா­ர­ணையில் தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நப­ரான வர்த்­தகர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கி­யுள்ள ஒப்­புதல் வாக்கு மூலத்தின் படி, நேவி கபில மாதாந்தம் 30 முதல் 40 ஆயிரம் ரூபாவை அவ­ரிடம் கப்ப­மாக பெறு­வ­தாக தெரி­ய­வந்­துள்­ளது. இதனைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ம­லேயே கொலை திட்­டத்தை தீட்­டி­ய­தாக சந்­தேக நப­ரான வர்த்­தகர் தெரி­வித்­துள்ளார்.

சம்பவ தினத்­துக்கு முன்­னைய தினமும் கபில 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரி­ய­தா­கவும் அதனை எடுத்துச் செல்ல வரும் போதே மது விருந்­துக்கு ஏற்­பாடு செய்­யு­மாறு தொலை­பே­சியில் கூறி­ய­தா­கவும் அதன் பின்­ன­ரேயே தனது நண்­ப­னான சமிந்­த­வுடன் சேர்ந்து கொலை திட்­டத்தை தீட்­டி­ய­தா­கவும் வர்த்­தகர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந் நிலையில் 3 உயர் ரக மது­பா­னத்­துடன் உணவையும் தயார் செய்து மதுவில் மாத்­தி­ரை­களைக் கலந்து நேவி கபி­லவின் குழு­வி­ன­ருக்கு அருந்த கொடுத்­த­தா­கவும் அதன் பின்னர் ஒவ்­வொ­ரு­வ­ராக சிறுநீர் கழிக்க வரும் போது இரும்புக் கம்­பியால் தலையில் தாக்கி கொலை செய்­த­தா­கவும் வர்த்­தகர் வாக்குமூலமளித்துள்ளார். இச்­சம்ப­வத்தின் போது சத்தம் வெளியே கேட்­காமல் இருக்க வேனின் பாட்டு சத்­தத்தை கூட்டி வைத்­தி­ருந்­துள்­ள­தா­கவும் தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து சட­லங்­களை மாக்­கந்­துர வாராந்த சந்தை பகு­திக்கு சந்தேக நபர்கள் எடுத்துச் சென்றுள்ள நிலையில், அங்கு கைவிட்டு செல்ல முனைந்துள்ளனர். எனினும் அங்கு சென்று சடலங்களை வைத்த பின்னர் பொலிஸாரிடம் சிக்குவோமோ என்ற அச்சம் ஏற்பட்டதால், மீண்டும் சடலங்களை வேனில் போட்டு தங்கொட்டுவ – இரபடகம பகுதியின் பாழடைந்த வீதியில் வைத்து எரித்துள்ளனர்.

மாக்கந்துர சந்தை பகுதியில் வைத்து சந்தேகத்துக்கு இடமான இரத்தக் கறைகள் பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந் நிலையில் மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY