கடந்த 100 ஆண்டுகளில் பிப்ரவரி மாதம் கடும் வெயில்: ஆய்வில் தகவல்

0
179

தற்போது கோடைகாலம் தொடங்கி விட்டது. இது குறித்து அமெரிக்காவின் நாசாவின் விண்வெளி ஆய்வு கல்வி நிறுவனமான கட்டார்டு இன்ஸ்டியூட்டின் இயக்குனர் கவின் ஸ்மிட் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 100 ஆண்டுகளை ஒப்பிடும் போது உலகில் பிப்ரவரி மாதத்தில்தான் கடும் வெயில் கொளுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் வழக்கத்தைவிட 1.14 டிகிரி செல் சியஸ் வெப்பம் கூடுதலாக இருந்தது.ஆனால் பிப்ரவரி மாதத்திலும் அது 1.35 டிகிரி செல்சியசாக அதிக அளவு அதிகரித்து இருந்தது என தெரிவித்துள்ளார்.

இது கடந்த 100 ஆண்டுகளில் ஒப்பிடும் போது மிக அதிக அளவு என கணக்கிடப்பட்டுள்ளது.

அது மனிதர்களால் வெளியான அசுத்த வாயுக்களால் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டு புவியில் வெப்பம் அதிகரித்ததாகவும் கருதப்படுகிறது.

LEAVE A REPLY