காத்தான்குடியில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படாதது ஏன்?

0
966

(அப்துல் மஜீத் முஹம்மட் பர்சாத்)

காத்தான்குடியில் பாத்திமா யுஸ்ரி என்ற 10 வயது சிறுமி கொடூரமான முறையில் சூடு வைத்து சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் நாம் அறிந்ததே!

அச்சிறுமியின் வாக்குமூலப்படி,

”கையில இருக்குற காயம்…?
போன கிழம சூடு வெச்சது…”

”தோள் பட்டையில் இருக்குறது…?
போன மாசம் வச்சது…”

” காலில இருக்கிறது…?
போன வருசம் வச்சது…”

”இந்தக் காயம்….
அது இரண்டு வருசத்துக்கு முதல் வெச்சது…”

சிறுமியின் உடல் முழுதும் இருக்கும் இரத்தம் கசிந்த காயங்களை பார்த்தால் கண்ணீரை தவிர வார்த்தைகள் இல்லை.

சூடு வைத்து சித்திரவதைக்கு உட்படுத்தியவர் என சந்தேகிக்கப்படுபவர் அந்த சிறுமியின் வளர்ப்பு தாயும், அதற்கு உடந்தையாக யுஸ்ரியின் தகப்பனான காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாயனின் முக்கியஸ்தரும் அல் ஜாமிஅதுர் ரப்பானியா அரபு கலாபீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளறுமான மெளலவி மஜீத் (ரப்பானி) ஆகிய இருவர்களும் ஆவார்கள்.

மிருகத்தனமான மனிதர்கள் காத்தான்குடி மன்னில் இன்னும் வாழ்கிறார்கள் என்ற செய்தி மனவேதனை தருவதுடன் இவ்வாரனவர்களுக்கு உச்ச (படிப்பினையான) தன்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் வழுப்பெறுகிறது.

அந்த வகையில் சட்டமும் தன் கடமையையும் செய்துள்ளது.

இச்சிறுமியின் விடயம் சம்பந்தமாக சட்டம் எவ்வாறு கடமையை செய்தது என்று பார்த்தால்,

“காத்தான்குடி-5 பதுறியா ஜும்ஆ பள்ளிவாசல் வீதியில் உள்ள மௌலவி அப்துல் மஜீதின் வீட்டில் சிறுமி ஒருவர் மீது தொடராக சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாக காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதற்கமைய உத்தியோகபூர்வமான முறையில் பெண் அதிகாரி ஒருவர் உட்பட அதிகாரிகள் சிலர் குறித்த வீட்டுக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போதே குறித்த வீடு காத்தான்குடி-5 பதுறியா ஜும்ஆ பள்ளிவாசலின் முக்கியஸ்தரும் அல் ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான மௌலவி எம்.எம்.ஏ. மஜீத் (ரப்பானி) யின் வீடு என்பதும் அவரது மகளே சித்திரவதைக்குட்படுத்தப்பட்டவர் என்பதும் மௌலவியின் இரண்டாவது மனைவியே சித்தரவதைகளை மேற்கொண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் மஜீத் மௌலவியும் வளர்ப்புத் தாயும் அவ்வாறான எந்தவித சம்பவங்களும் தங்களது வீட்டில் இடம்பெறவில்லை என்றும் அலர்ஜிக் மூலமான காயங்களே ஏற்பட்டுள்ளன என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். சிறுமியும் அவ்வாறே கூறியுள்ளார்.

எனினும் சந்தேகமடைந்த அதிகாரிகள் சிறுமியை தனியாக அழைத்துச் சென்று விசாரித்ததுடன் பெண் அதிகாரி மூலமாக சிறுமியின் உடலை பரிசோதித்துள்ளனர். இதன்போதே சிறுமிக்கு ஏற்பட்டிருப்பது அலர்ஜிக் அல்ல, சூட்டுக் காயங்களே என அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட அதிகாரிகள் உடனடியாக சிறுமியை தமது பொருப்பில் எடுத்ததுடன் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். வைத்தியர்களும் சிறுமியை பரிசோதித்த பின்னர் உடம்பில் இருப்பவை சூட்டுக் காயங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து விடயம் வைத்தியசாலை மூலமாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலைக்கு வருகை தந்த காத்தான்குடி குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றதுடன் சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத் தாயிடம் மறுநாள் சனிக்கிழமை வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இதனையடுத்தே சிறுமி கடுமையான முறையில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமை ஆதாரபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பொலிசார் மௌலவி மஜீத் ரப்பானியையும் அவரது இரண்டாவது மனைவியையும் ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்தார்கள்.

பின்னர் அவர்களின் வாக்கு மூலம்கள் பதியப்பட்டு நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு எதிர்வரும் 28.03.2016 ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதாவான் உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு சட்ட நடவடிக்கை அணைத்தும் பூர்த்தி அடைந்து விளக்க மறியலில் வைக்கப்பட்ட பின்பு காத்தான்குடி பகுதியில் அநாமோதைய பெயரில் ஹர்த்தால் துண்டுப்பிரசுரம் வெளிவந்தது. அதை பல ஊடகம்கள் செய்தியாக பிரசுரித்திருந்தது.

அந்த துண்டுபிரசுரத்தில் குறிப்பிட்ட விடயம்கள் சரியாக இருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நடந்து முடிந்த விடயங்களாகும்.

“மேற்படி சம்பவத்தில் எக்காரணம் கொண்டும் பிணை வழங்க கூடாது “

“சட்டமும் தகுந்த தண்டனை வழங்க வேண்டும் “

அந்த துண்டுப்பிரசுரத்தில் வழியுறுத்தும் செய்திகளாகும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு விடயமும் நடைபெற்றுள்ளது. சட்டமும் தன்கடமையை செய்துள்ளது.

இவ்வாறு நிலமை இருக்கும்போது இந்த ஹர்த்தால் இன்று (15) தேவையற்றது என சமூக சிந்தனையாளர்களும், புத்திஜீவிகளும், வர்த்தகர்களும் சிந்தித்து இந்த அனாமோதைய துண்டுப்பிரசுரம் மூலம் வந்த செய்தியை புரக்கனித்துள்ளார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்)

இவ்வாரான யுஸ்ரிக்களுக்கும், சீமாக்களுக்கும் நீதி கோட்டு போராடும்போது திரைக்கு பின்னால் நின்று மெட்டை துண்டுப்பிரசுரங்களை அடித்து, வெரும் உணர்ச்சிகளை தூண்டுவதை விட, எதிர்வரும் நாட்களில் சட்ட அனுமதியுடன் பாடசாலை மாணவி என்பதால் இக்கொடூர செயலுக்கு பாடசாலை மாணவிகள், மகளிர் அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஜனநாயக வழியில் கண்டனங்களை வெளிக்கொண்டு வருவதுடன், நமதூர் தாய் நிறுவனமான காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளம் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து இக் கொடூர செயலை செய்தவர்களுக்கு சட்டத்தில் அதிக தண்டனை வழங்குமாறு எந்த அழைப்பு விடுத்தாலும் அதற்கு காத்தான்குடி புத்திஜீவிகள், வர்த்தகர்கள் நிச்சயம்  ஒத்துழைப்பார்கள்.

ஆகவே, பொறுப்பு வாய்ந்தவர்கள் இவ்வாரான விடயங்களுக்கு எதிராக குரல் கெடுப்பது அவசியம். தேவைப்பாடும் எமது எதிர்கால சந்ததினார்களுக்கான சிறந்த பாதுகாப்பும் ஆகும்.

LEAVE A REPLY