3 நாட்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: ரஞ்சித் சியம்பலாபிட்டிய

0
141

எதிர்வரும் 3 நாட்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித்சியம்பலா பிட்டிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வப்போது பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் 3 நாட்களுக்கு பின்னர் இந்த நிலை வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள குழு இன்று (15) மாலை கூடவுள்ளது.

சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு திணைக்களத்தின் பொலிஸ் குழுவொன்று நேற்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இது தொடர்பிலான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு மேலும் தெரிவித்திள்ளது.

நேற்றைய தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் அவ்வப்போது துண்டிக்கப்பட்டது.

LEAVE A REPLY