இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி

0
174

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக் கிண்ண பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் குவித்தது. அந்த அணித் தரப்பில் முகமது ஹபீஸ் அதிகப்பட்சமாக 49 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட்களை இழந்து 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லஹிரு திரிமன்னே மட்டும் அதிகப்பட்சமாக 45 ரன்கள் எடுத்தார்.

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் பந்து வீச்சாளர் முகமது அமிரால் ஒரு விக்கெட்டை கூட வீழத்த முடியவில்லை. இமாத் வாசிம் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

LEAVE A REPLY