சிரியா உள்நாட்டுப் போரில் 161 முறை ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்

0
162

சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று வெளியாகி உள்ள புதிய தகவலின்படி சண்டையில் இதுவரை 161 முறை ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தப்பட்டுள்ளன.

2015ம் ஆண்டு இறுதி நிலவரப்படி 161 முறை ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், 1491 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் சிரிய அமெரிக்க மருத்துவ சங்கம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 69 முறை ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிரிய அமெரிக்க மருத்துவ சங்கம், சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு காரணமானவர்களை விரைவில் அடையாளம் கண்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அல்லது பிற நீதி அமைப்புகள் முன் நிறுத்த வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

LEAVE A REPLY